Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
Today Rasi Palan 04 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 04ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, அலுவலக வேலைகளில் இன்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். இருப்பினும், அவசர அவசரமாக எந்த முக்கிய வணிக முடிவையும் எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலக் குறைவு காரணமாக, இன்று உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் பரபரப்பான வழக்கத்தின் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் நிதானமாகவும்
புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம். வியாபாரிகள் புதிதாக எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன்பு நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலையுடன், குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினால் நல்லது. பணப்பற்றாக்குறையால் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமப்படுவீர்கள். உங்கள் உடல்நிலை இன்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மதியம் 1:25 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உடன்பிறப்புடன் இன்று உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். எனவே, உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்தவும். கோபத்திலும், அவசரத்திலும் செய்யும் வேலையால் வருத்தப்பட நேரிடலாம். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். இன்று நீங்கள் வேலை தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 7:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. இன்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான சந்திப்பிற்கு அழைப்பு வரலாம். தொழிலதிபர்கள் இன்று ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். புதிய வேலையைத் தொடங்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் காலை 9:25 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, குழந்தைகள் மூலம் இன்று நல்ல செய்தி வந்து சேரும். பண விஷயத்தில் இன்று மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் நிதி முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். இன்று புதிய பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், சோம்பலைத் தவிர்த்து, முக்கிய பணிகளில் கவனம் செலுத்தவும். நீங்கள் முன்னேற விரும்பினால், அலட்சியத்தைத் தவிர்க்கவும். வணிகர்கள் வரி தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். அலுவலகத்தில் மோதல்களைத் தவிர்த்திடுங்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களின் புதிய வாகனம் வாங்கும் கனவு இன்று நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 10:00 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எவ்வித அலட்சியமும் காட்ட வேண்டாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். முன்னேற்ற கனவில் ஏமாற்றத்தை கண்டால், மனம் தளராது தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை பதற்றமானதாக இருக்கலாம். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:20 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் செயல்திறனில் குறைகளை கண்டறியலாம். தொழிலதிபர்கள் பெரிய வாடிக்கையாளர்களின் நட்பால் தொழில் வளர்ச்சி காணலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சில பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த வேண்டுமெனில், முதலில் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மேலும், எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். இன்று நீங்கள் சில சுயநலவாதிகளைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, சிறிய விஷயங்களுக்கு கோபப்படும் உங்கள் குணத்தால் அன்புக்குரியவர்களின் மனம் புண்படக்கூடும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யவும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீரென்று ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேரிடும். இன்று, உங்களின் பழைய நினைவுகள் சிலவற்றை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீரிழப்பு தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை



Click it and Unblock the Notifications











