Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது!
Today Rasi Palan 02 November 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி முடிவுகளை கவனமாக யோசித்து எடுப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 02ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. இன்று பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். இன்று வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் நேர்மறை ஆற்றல் முதலாளியை பெரிதும் ஈர்க்கும். வியாபாரிகள் இன்று நிலுவையில் உள்ள லாபத்தைப் பெறலாம். பணப்பற்றாக்குறையால் தடைபட்ட வேலை இன்று நிறைவேறும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, சிறிய விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதைத் தவிர்க்கவும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைக்க, தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் பெரிய லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நிறைய பணம் செலவாகலாம். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
கடகம்
கடக ராசிக்கரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வியாபாரிகளுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். கோபத்திலும், அவசரத்திலும் செய்யும் வேலையால் நீங்கள் வருத்தப்பட நேரிடலாம். மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இன்று நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடலாம். அலுவலகத்தில் சக பெண்களிடம் பேசும் போது, வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். தொழிலதிபர்கள் நீதிமன்ற விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு தலைவலி, உடற்சோர்வு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் காலை 10:45 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க நேரிடும். இதனால், நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர், தங்கள் கூட்டாளருடன் மோதலைத் தவிர்க்கவும். வீட்டில் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கடும் வார்த்தைகள் உங்கள் மனதைப் புண்படுத்தும். இதனால் நீங்கள் உணர்ச்சி ரீதியாக சற்று பலவீனமாக உணருவீர்கள். தற்போதைய வேலை திருப்தியில்லாவிட்டால், உங்கள் வேலையை மாற்ற இதுவே சரியான நேரம். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோம்பலைத் தவிர்க்க, நீங்கள் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களிடம் நீங்கள் வைத்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரக்கூடும். முக்கியமான வேலைகளை நீங்களே செய்து முடிக்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அன்புக்குரியவரின் உதவியால் உங்கள் முக்கிய பிரச்சனை தீர்க்கப்படும். இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். வருமானம் உயரும். இன்று உடல்நலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் நன்றாக இருக்காது. எனவே, இன்று நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் சாத்தியமாகும். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் தந்தையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் உறவுகளில் மனகசப்பு அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு நல்ல நாள். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் தங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். கடினமாக உழைத்தால் விரைவில் வெற்றி கிடைக்கும். கடனை திருப்பி செலுத்துவதில் இன்று சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுக்கவும். இன்று உங்கள் அன்புக்குரியவர் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று எந்த கடினமான வேலையையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று வீட்டில் பூஜை, யாகம் போன்றவற்றை ஏற்பாடு செய்யலாம். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை



Click it and Unblock the Notifications
