Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Today Rasi Palan 01 May 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகுது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 01 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் சிறந்த வெற்றியை பெறுவீர்கள். நிதி நிலையை வலுப்படுத்த சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருந்தால், அதனால் இன்று நற்பலனைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் நல்ல மனநிலையில் இருப்பார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் நிதி பிரச்சனை தீரும். பணப் பிரச்சனையால் தடைபட்ட வேலைகள் இன்று முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! சில நாட்களாக நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இன்று உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் பெரிய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். பணத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் உங்கள் கவலையும் அதிகரிக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வீட்டில் உள்ளோருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிஸியான நாளாக இருக்கும். பணம் குறித்த கவலை அதிகரக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், அதில் வெற்றி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பாதகமான சூழ்நிலையில் உங்கள் துணை உங்களுக்கு தைரியத்தை அளிப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று ஊடகம், அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நல்ல வெற்றியைத் தரும் நாளாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான எந்த பெரிய பரிவர்த்தனையையும் செய்யலாம். பெற்றோருடனான உங்கள் உறவு இன்னும் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக தங்கம், வெள்ளி வியாபாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 முதல் இரவு 7:55 வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் பெரிய செலவுகளை செய்ய நல்ல நாள் அல்ல. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நாள் சுமாராக இருக்கும். வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 4:20 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சியை மனதில் வைத்து உங்கள் முடிவை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தசைகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் விரும்பிய வாழ்க்கைத்துணையை பெறலாம். நிதி விஷயங்களில் அவசரப்படக்கூடாது. தொழிலதிபர்கள், ஒரு புதிய ஒப்பந்தத்தை முடிவு செய்யும் முன் நன்கு விசாரித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் பழைய சொத்தை விற்க நினைத்தால், அதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று சலாவான நாளாக இருக்கும். கடினமாக உழைத்தும் வெற்றி கிடைக்காததால் நம்பிக்கை குறையலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளின் பிரச்சனைகள் தீரும். உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் ஆதரவையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களின் அனைத்து வேலைகளும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 முதல் மதியம் 2:20 வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள். அன்பானவர்கள் இன்று உங்களை புறக்கணிப்பதை உணர்வீர்கள். ஆனால் பேசுவதன் மூலம் அதை தவிர்க்கலாம். பணிபுரிபவர்கள் இன்று மிகவும் பிஸியாக இருப்பார்கள். வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 முதல் 11:25 வரை



Click it and Unblock the Notifications











