Today Rasi Palan 01 June 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 01ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 01 June 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, சொத்து சம்பந்தமான நீண்ட கால பிரச்சனை தொடர்பான எந்த முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். பழைய கடனை திருப்பி செலுத்த வேண்டி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வாழ்க்கைத்துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடற்சோர்வு அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, வேண்டா நட்பால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். இன்று மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று அலுவலகத்தில் உங்கள் எந்த வேலையையும் முடிக்காமல் விடாதீர்கள். இன்று வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். நாளின் இரண்டாம் பகுதியில், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் எண்ணங்களை உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். இது தவிர சுற்றுலா செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பெரியோர்களின் முழு ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:25 மணி முதல் காலை 10:15 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். இன்று அலுவலகத்தில் உங்கள் நேர்மறை ஆற்றல் முதலாளியை பெரிதும் ஈர்க்கும். விரைவில் அதன் சரியான பலனைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நிதி ஆதாயம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இன்று வீண் விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் பெரும் நிதி இழப்பு ஏற்படக்கூடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் அனைத்து வேலைகளையும் முழு வேகத்துடன் செய்து முடிக்க வேண்டும். உங்களின் கால தாமதம் இன்று முதலாளியின் மனநிலையைக் கெடுக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 9:55 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் நிலை வலுப்பெறும். உங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆடை வியாபாரிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணிசுமை குறையும். உயர் அதிகாரிகளிடமிருந்து வேலை தொடர்பான ஆலோசனைகளையும் பெறலாம். வியாபாரிகளின் தடைப்பட்ட வேலை விரைவில் முடிவடையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கவும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:35 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வேலையில், இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் கடின உழைப்பு வெற்றியடையும். மாணவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கல்வி தொடர்பான எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பொருளாதார பிரச்சனைகள் தீரும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் காலை 10:10 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் வேலை தொடர்பாக சிறு பயணம் மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவிடலாம். இன்று வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரையில், அவசரத்திலும், பீதியிலும் எந்த வேலையையும் செய்யாதீர்கள். இல்லையெனில் காயமடைய நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, நீங்கள் புதிய சொத்து போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அப்படிப்பட்ட சூழலில் அவசரப்பட வேண்டாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வங்கியில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான அறிகுறி தென்படும். சிறு தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற நாள். நீங்கள் பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் அதற்கு பொருத்தமானது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். உங்கள் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்தால் நல்லது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் காலை 9:35 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வேலை தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாடு சென்று தொழில் செய்ய நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக உடல்நிலை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு, இன்று ஓரளவு நிம்மதி கிடைக்கும். இருப்பினும், நீங்கள் அவ்வப்போது மருத்துவரை அணுகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை

Story first published: Thursday, June 1, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion