Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 01 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலையில் அலட்சியத்தைத் தவிர்ப்பது நல்லது...
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 01ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய உறுப்பினரின் வருகை இருக்கலாம். அன்புக்குரியவர்களுடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கவும். தொழில் சம்பந்தமான எந்தவொரு பெரிய பிரச்சனையும் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வளர்ச்சி சாத்தியமாகும். இன்று உங்களுக்கு பெரிய ஆர்டர் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வருமானத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:35 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய முன்னேற்றம் அடைய முடியும். இன்று உத்தியோகஸ்தர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் பெரிய முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இன்று வீண் செலவு செய்யும் உங்கள் வாழ்க்கைத் துணையின் தன்மை உங்களை மிகவும் தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு வயிற்றில் தொற்று ஏற்படலாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:25 மணி முதல் மாலை 5:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான காலமிது. நீங்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்படலாம் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கலாம். இன்று, உங்கள் அனைத்து வேலைகளுக்கும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். இதன் மூலம் நல்ல பலனை பெறலாம். தொழிலதிபர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். சிறிய வேலைகளைக் கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பரபரப்பான வழக்கத்தின் காரணமாக, இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியாது. நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, போதுமான அளவு தூங்க வேண்டும். தேவையற்ற கவலைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:05 மணி முதல் இரவு 9:05 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாள். இன்று, குறைந்த முயற்சியில், பெரிய வெற்றி அடையலாம். உங்களின் தடைப்பட்ட வேலைகள் இன்று முடிவடைய வாய்ப்புகள் அதிகம். உத்தியோகஸ்தர்களின் தலைமைத்துவ திறன் இன்று முதலாளியை மிகவும் ஈர்க்கும். இன்று உங்களிடம் சில பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். காதல் வாழ்க்கையில் விஷயங்கள் பதற்றமாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் மதியம் 12:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று, உங்கள் துணையின் கடுமையான தன்மை வீட்டின் அமைதியைக் கெடுக்கும். உணர்வு ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யலாம். வேலையில் எந்த வித அலட்சியமும் காட்ட வேண்டாம். குறிப்பாக உத்தியோகஸ்தர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களின் திடீர் பயணம் மிகவும் வேடிக்கையாக இருக்கும். இன்று உங்கள் ஆர்வத்தில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். வேலையில் அதிக மனஅழுத்தத்தைத் தவிர்க்கவும். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அத்துடன் உங்கள் செயல்திறனும் குறையும். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெரியவர்களுடனான உங்கள் உறவு இன்னும் வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் இன்று உங்களை தொந்தரவு செய்யலாம். இன்று நீங்கள் மனதளவில் நன்றாக உணரமாட்டீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். ஆனால் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று எந்த பெரிய நிதி பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். இன்று பணப்பற்றாக்குறையால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும் கடன் வாங்க வேண்டியிருக்கும். வானிலை மாற்றத்தால் இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:20 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இன்று உங்கள் மீது கவனம் செலுத்தவும். ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று பெரும் நிதி ஆதாயத்தைப் பெறலாம். வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டுமென்றால், உங்கள் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களின் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏதாவது விசேஷமாக செய்ய விரும்பினால், இன்று அதற்கு பொருத்தமான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிவிட்டால், கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் வேலையில் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வேலை தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால், இன்று உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் தோன்றலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மதியம் 12 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று திடீரென்று பெரிய பலன்களைப் பெறுவார்கள். இது தவிர, அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் இன்று விரும்பிய பலனைப் பெறுவார்கள். பொருளாதாரத்தில், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பூஜை, யாகம் போன்றவற்றை உங்கள் வீட்டில் ஏற்பாடு செய்யலாம்.உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். வீண் செலவுகளை குறைப்பது நிதி நிலையை மேம்படுத்த உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:1
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:45 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று ஏதேனும் முக்கியமான வேலையை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று தொடங்கினால் வெற்றி பெறுவீர்கள். இரும்பு வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை மேலோங்கும். உங்கள் பதவியும் அலுவலகத்தில் வலுவாக இருக்கும். பண விஷயத்தில் அதிக அலட்சியமாக இருக்க வேண்டாம். இல்லையெனில், எதிர்கால திட்டங்களில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 மணி முதல் மாலை 3 மணி வரை



Click it and Unblock the Notifications











