Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஜூலை முதல் வாரத்தில் நிகழும் 3 கிரக பெயர்ச்சிகள்: இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது...
Three Planets Transit In July 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, மாதந்தோறும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. குறிப்பாக ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று பெரிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன.

அதில் ஜூலை 01 ஆம் தேதி தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படும் செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்கிறார். அதன் பின் ஜூலை 07 ஆம் தேதி காதல், அழகு, ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்கிறார். பின்பு ஜூலை 08 ஆம் தேதி புத்திகாரகனான புதன் கடக ராசிக்கு செல்கிறார்.
இப்படி மூன்று கிரகங்கள் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் முதல் வாரமானது மிகவும் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும்.
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பல நற்செய்திகளைப் பெறக்கூடும். பழைய முதலீடுகளால் இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் முதல் வாரம் சாதகமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் கிடைக்கும்.
முக்கியமாக தைரியம் அதிகரிக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். புதிய விஷயங்களைத் தொடங்க சாதகமான காலமாக இருக்கும். சில முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இக்காலம் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
இதுவரை ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையேயான உறவு வலுபெறும். நிலம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த வாரத்தில் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications