Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்க இதுல எந்த மாதிரி டூத் பேஸ்ட்டை அழுத்துவீங்க-ன்னு சொல்லுங்க.. உங்க பத்தின ஒரு உண்மைய சொல்றோம்..
Personality Test In Tamil: நம் ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறுபட்டிருக்கும். அதுவும் ஒருவர் சுயநினைவுடன் ஒன்றை தேர்வு செய்வதை விட, அவரது பழக்கவழக்கங்கள் அவரின் குணாதியங்களை 40% வெளிப்படுத்துவதாக உளவிலாளர்கள் கூறுகின்றனர்.
ஆம், தினசரி நாம் ஒருசில பழக்கங்களை நம்மை அறியாமல் கொண்டிருப்போம் மற்றும் ஒருசில செயல்களை நம்மை அறியாமல் செய்வோம். இப்படி செய்யும் பழக்கவழக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அந்த வகையான பழக்கங்கள் ஒருவரது மனநிலை மற்றும் குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன.

அதில், நாம் தினமும் காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்க டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் டூத் பேஸ்ட்டை அழுத்துவோம். இப்படி டூத் பேஸ்ட்டை அழுத்தும் பழக்கம் ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
கீழே டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் விதங்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதில் நீங்கள் எப்படி டூத் பேஸ்ட்டை அழுத்துவீர்கள் என்பதை பார்த்து, உங்களின் உண்மையான குணாதியங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விதம் 1
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு டூத் பேஸ்ட்டை புதிது போன்றே வைத்து பயன்படுத்துவீர்களா? அப்படியானால் நீங்கள் தனிமையை அதிகம் விரும்புவீர்கள். நிறைய கனவு காண்பீர்டகள். கலைநயமிக்கவர். சில சமயங்களில் நீங்கள் ஒரு தனி கற்பனை உலகில் வாழ்வீர்கள். மிகவும் சென்சிடிவ்வானவர், மென்மையானவர், எளிமையானவர், அக்கறையுள்ளவர் மற்றும் சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவர். அதே சமயம் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
விதம் 2
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு டூத் பேஸ்ட்டின் நடுப்பகுதியில் அழுத்தி டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவீர்களா? அப்படியானால் நீங்கள் யதார்த்தமான மற்றும் சுறுசுறுப்பான நபர் மற்றும் எதையும் சற்று அவசரமாகவே செய்வீர்கள். நீங்கள் சுத்தமாக இருக்கமாட்டீர்கள் மற்றும் எதையும் ஒழுங்காகவும் செய்யமாட்டீர்கள். ஆனால் சவாலை எதிர்கொண்டால், அதை வெற்றிகரமாக தீர்க்கும் திறன் கொண்டவர். உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். வாழ்க்கையை எவ்வாறு சமநிலையில் பராமரிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படமாட்டீர்கள்.
விதம் 3
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு டூத் பேஸ்ட்டின் மேல் பகுதியில் அழுத்தி பேஸ்ட்டை பயன்படுத்துவீர்களா? அப்படியானால் நீங்கள் அதிக பிடிவாதமாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். மற்றவர்களை அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். உங்களை நீங்களே அதிகம் நேசிப்பீர்கள். உங்களின் நோக்கங்களுக்காக மற்றவர்களை பயன்படுத்துவீர்கள்.
விதம் 4
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு டூத் பேஸ்ட்டின் அடிப்பகுதியில் இருந்து சுருட்டி பயன்படுத்துவீர்களா? அப்படியானால் நீங்கள் சிக்கனமானவர் மற்றும் சுத்தமானவர். உங்களைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியும் சிந்திப்பீர்கள். எதையும் சரியாக செய்து முடிக்க நினைப்பீர்கள் மற்றும் எதையும் வீணாக்கமாட்டீர்கள். உங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு வாழ விரும்புவீர்கள். கடின உழைப்பாளி மற்றும் உங்கள் வேலையை சிறப்பாக செய்ய நினைப்பீர்கள். உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக் கொள்வீர்கள்.
விதம் 5
நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு கண்ட இடத்தில் அழுத்தி டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவீர்களா? அப்படியானால் நீங்கள் மிகவும் கலைநயமிக்கவர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். எதையும் சரியான நேரத்தில் ஒழுங்காக செய்து முடிக்க முடியாது. பணிகளை திட்டமிடுவதும், நிறைவேற்றுவதும் கடினமாக இருக்கும். ஆனால் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அடிக்கடி மனநிலையில் மாற்றங்களை சந்திக்கலாம்.



Click it and Unblock the Notifications