Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
கட்சி பெயரை அறிவித்த தளபதி விஜய்... இணையத்தில் தீயாய் பரவும் ஆதரவு மீம்ஸ்களும், கிண்டல் மீம்ஸ்களும்....!
தமிழகத்தில் இன்று உச்சக்கட்ட பரபரப்பான செய்தியாக இருப்பது தளபதி விஜய்-ன் அரசியல் கட்சியின் பெயரின் அறிவுப்புதான். தன்னுடைய கட்சியின் பெயராக "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மக்களும் அவரின் தீவிர ரசிகர்களும் இதனை மகிழ்ச்சியோடு எதிர்பார்த்திருந்த தருணத்தில் சற்றும் எதிர்பார்க்காத மற்றொரு அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதுதான் தளபதி சினிமாவில் இருந்து விலகுவது பற்றிய அறிவிப்பு.

தற்போது விஜய் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் GOAT(Greatest of All Time) என்ற திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தவிர கமிட் ஆகியுள்ள திரைப்படங்களில் தந்தது பணிகளை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நிச்சயம் அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.
எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், கமலஹாசன் வரிசையில் அரசியலில் நுழைந்த உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் மாறியுள்ளார். விஜய்-ன் இந்த அரசியல் பிரவேசம் மக்களிடையே பல்வேறு கேள்விகளையும், ஆர்வத்தையும் எழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் காலை முதலே விஜய்-க்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டும், பரப்பப்பட்டும் வருகிறது. பல்வேறு இயக்குனர்களும், ரசிகர்களும் தங்கள் ஆதரவை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய்-ன் அரசியில் பிரவேசத்திற்கு எதிர் மனநிலையில் இருப்பவர்கள் தங்கள் எதிர்ப்பையும், கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் விஜய்-ன் அரசியல் கட்சி பற்றிய சில வேடிக்கையான மீம்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications










