Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
Teddy Day 2026: டெடி பியரின் நிறங்களும்.. அவற்றின் உண்மையான அர்த்தங்களும்...
Teddy Day 2026: காதலர் வாரத்தின் நான்காவது நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் டெடி தினம். இந்நாளில் காதலிப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அழகான டெடி பியர்களை பரிசாக வழங்கி, தங்களின் காதல் மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.
டெடி பியர் என்னும் கரடி பொம்மை என்பது ஒரு அழகான பொம்மை மட்டுமல்ல, ஆழமான உணர்வுகளின் சின்னமாகவும் திகழ்கின்றன. ஆனால் இந்த டெடி பியரின் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்பது தெரியுமா?

நீங்கள் ஒருவரை காதலித்து வந்தாலோ அல்லது காதலை தெரிவிக்க நினைத்தாலோ, இந்த டெடி பியர் தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் டெடி பியரை பரிசளிக்கும் முன், அதன் ஒவ்வொரு நிறம் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்தும் என்பதை தெரிந்து பின் பரிசளியுங்கள். கீழே டெடி பியரின் நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
சிவப்பு டெடி பியர்
இந்த நிறம் காதல், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை குறிக்கிறது. ஒருவருக்கு சிவப்பு டெடி பியர் கொடுத்தால், நீங்கள் உங்கள் ஆழ்ந்த காதலையும் நிதர்சனமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறீர்கள். காதலர் தினத்திற்கு இது மிகவும் பிரபலமானது.
பிங்க் டெடி பியர்
பிங்க் நிறம் மென்மை, பாசம் மற்றும் இனிமையைக் காட்டுகிறது. அன்பான உணர்வுகளை வெளிப்படுத்த நினைப்போருக்கு இது ஏற்றது. புதிய உறவுகளுக்கு பிங்க் நிற டெடி பியர்கள் ஒரு சிறந்த தேர்வாகும்.
வெள்ளை டெடி பியர்
வெள்ளை நிறம் தூய்மை, அப்பாவியத்தன்மை, நேர்மையைக் குறிக்கிறது. இதை பரிசளித்தால், தூய்மையான உணர்வுகளும் நேர்மையும் வெளிப்படும். நேர்மை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகளுக்கு இந்த நிற டெடி பியர் பொருத்தமானது.
நீல நிற டெடி பியர்
நீல நிறம் அமைதி, நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. அன்புக்குரியவருடன் அமைதியான, நிலையான உறவை விரும்ப்புவோருக்கு இது ஏற்றது. ஆழமான நட்பு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகளுக்கும் நீல நிற டெடி பியர் ஏற்றவை.
கருப்பு டெடி பியர்
கருப்பு நிறம் மர்மம், சக்தி, தீவிரத்தை குறியிடுகிறது. பொதுவாக அன்பு மற்றும் பாசத்திற்கு குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதை பரிசளித்தால் நீங்கள் அவர்கள் மீது தீவிரமான மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மஞ்சள் டெடி பியர்
மகிழ்ச்சி, உற்சாகம், நட்பின் அடையாளமாக மஞ்சள் நிறம் விளங்குகிறது. அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பழக விரும்புவோருக்கு இது ஏற்றது. நண்பர்களுக்கான சிறந்த பரிசாகவும் அமையும்.
ஊதா டெடி பியர்
அரசத்தன்மை, ஆடம்பரம், மர்மத்தைக் குறிக்கிறது ஊதா நிறம். அன்புக்குரியவர் உங்களுக்கு மிகவும் விசேஷமானவர் என்பதை வெளிப்படுத்த விரும்புவோருக்கு இது ஏற்றது. ஆழமான மற்றும் மர்மமான உறவுகளுக்கும் இந்த ஊதா டெடி பியர் மிகவும் சிறந்ததாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


