Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு பிடித்த ஆசிரியருக்கு 'இப்படி' வாழ்த்து சொல்லுங்க.. சந்தோஷப்படுவாங்க..
Teacher's Day Wishes In Tamil: தாய், தந்தைக்கு அடுத்தப்படியாக நமக்கு நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுப்பவர் தான் ஆசிரியர். சொல்லப்போனால் நம்மை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட ஆசிரியர்களை போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் தான் மரியாதைக்குரிய அறிஞரும், இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்ததார். இவர் ஆசிரியர்களை சமூகத்தின் உண்மையான தூண்களாக நம்பினார். இதனால் தான் இவர் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக ஒரு சிறப்பான நாள் என்றால், முதலில் வாழ்த்துக்களைத் தான் தெரிவிப்போம். அதுவும் இப்படியான வாழ்த்துக்கள் மனதை வருடும் வகையில் இருந்தால், இன்னும் அற்புதமாக இருக்கும் அல்லவா? இந்த ஆசிரியர் தினத்தன்று உங்கள் ஆசிரியருக்கு அவரது மனதில் சிறப்பான இடம் பிடிக்குமாறான ஒரு இனிமையான வகையில் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா?
அதுவும் கவிதை வடிவில் வாழ்த்துக்களை தெரிவிக்க நினைக்கிறீர்களா? கீழே ஒருசில அழகான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு பிடித்த ஆசிரியருக்கு அனுப்புங்கள்.
1. நீங்கள் கற்பித்த பாடங்கள் வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்டவை. எல்லாவற்றிற்கும் நன்றி. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
2. எனது வெற்றிக்கு அடித்தளமிட்டவருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
3. என் பயங்களை நம்பிக்கையாகவும், சந்தேகங்களை தெளிவாகவும் மாற்றிய ஆசிரியருக்கு நன்றி! ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
4. நீங்கள் கற்றுக் கொடுத்த ஒவ்வொரு பாடமும் இன்று நான் இருக்கும் நிலைக்கு ஒரு படியாகும். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
5. ஒரு ஆசிரியரை விட - ஒரு வழிகாட்டியாக, நண்பராக இருப்பதற்கு நன்றி. உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
6. கற்றலை மகிழ்ச்சியான பயணமாக மாற்றிய வழிகாட்டிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
7. எனக்குப் பறக்க சிறகுகளைத் தந்த வழிகாட்டிக்கு - ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications






