Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணின் வினோதமான கின்னஸ் சாதனை... அப்படி எதில் சாதனை பண்ணிருக்கார் பாருங்க...!
பற்கள் நமது உடலின் தவிர்க்க முடியாத ஒரு பாகமாகும், பேச்சு முதல் உணவை ருசிப்பது வரை பற்கள் நம் உடலின் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக 32 பற்கள் இருக்கும், சிலருக்கு அதனை விட குறைவாக இருக்கும்.
வெகுசிலருக்கே ஒன்று அல்லது இரண்டு பற்கள் அதிகமிருக்கும். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26 வயதுக்கு பெண்ணுக்கு 38 பற்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

38 பற்கள் கொண்ட அதிசய பெண்
ஒரு நபரின் வாயில் அதிக பற்கள் கொண்ட பெண் என்ற சாதனையை அவர் இப்போது பெற்றுள்ளார். அவருடைய மருத்துவ ரிப்போர்ட்களை பார்க்கும் போது, கல்பனா பாலனுக்கு நான்கு கூடுதல் தாடை (கீழ் தாடை) பற்கள் மற்றும் இரண்டு கூடுதல் மேல் தாடை (மேல் தாடை) பற்கள் உள்ளன, இதனால் எண்ணிக்கை 32 முதல் 38 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது அதிகப்படியான பற்கள் ஒவ்வொன்றாக வளர ஆரம்பித்தன. அவரின் இந்த பற்களின் வளர்ச்சி அவரின் டீனேஜ் பருவத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
கல்பனா பாலன்
தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 26 வயதான பாலனுக்கு மொத்தம் 38 பற்கள் உள்ளன. கின்னஸ் உலக சாதனைகளின் படி, அவரது தனித்துவமான பற்கள் இந்த ஆண்டு ஜூன் 24 அன்று சரிபார்க்கப்பட்டது. இந்த தனித்துவமான சாதனைக்காக அவர் பதிவு செய்தவுடனேயே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தினார்.
கூடுதல் பற்களால் வலி இல்லை
கின்னஸ் உலக சாதனைகளின் அறிக்கையின் படி, அவரது டீன் ஏஜ் பருவத்தில், கல்பனாவின் கூடுதல் பற்கள் ஒவ்வொன்றாக வளர ஆரம்பித்தன. ஆனால் இந்த புதிய பற்களால் அவர் எந்த வலியையும் அனுபவிக்கவில்லை, ஆனால் உணவு அடிக்கடி பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்வதால் சாப்பிடுவது சிக்கலாக இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். ஒருமுறை கல்பனாவின் பெற்றோர் கூடுதல் பற்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவற்றை அகற்றும்படி அறிவுறுத்தினர்.
மருத்துவரின் அறிவுரை
அவர்கள் பல் மருத்துவருடன் கலந்தாலோசித்த போது, பற்களை முழுமையாக வளர விடுமாறு பரிந்துரைத்தார், இதனால் அகற்றும் செயல்முறை எளிதாகும் என்று அவர் கூறினார். ஆனால் கல்பனா பற்களை அகற்றுவதை விரும்புவதில்லை.
கல்பனாவின் பதில்
இதுகுறித்து கல்பனாவிடம் கேட்டபோது, "கின்னஸ் உலக சாதனை பட்டத்தை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் " என்று அவர் கூறினார். மேலும் "இது எனது வாழ்நாள் சாதனை," என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மருத்துவ நிலை
அதிகப்படியான பற்களை உருவாக்கும் இந்த மருத்துவ நிலை ஹைபர்டோன்டியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பெண்கள் பிரிவில் கல்பனா சாதனை படைத்துள்ளார், கனடாவைச் சேர்ந்த இவானோ மெலோன் என்பவர் ஆண்களுக்கான கின்னஸ் சாதனை பட்டதைப் பெற்றுள்ளார். அவருடைய வாயில் கிட்டதட்ட 41 பற்கள் இருந்துள்ளன.



Click it and Unblock the Notifications
