Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தமிழ்நாட்டில் கல்வியறிவு மோசமாக உள்ள மாவட்டம் எது தெரியுமா? உங்க மாவட்டம் எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகும். பொருளாதாரரீதியாகவும், கலச்சாரரீதியாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு என்பது அளப்பரியது. தமிழ்நாட்டின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நம் மாநிலத்தின் கல்வியறிவுதான்.கிட்டதட்ட 8 கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 80.9% ஆக உள்ளது.
தமிழ்நாடு மாறுபட்ட கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட மாவட்டங்களைக் கொண்டது. இதில் சில மாவட்டங்கள் அதிகபட்ச கல்வியறிவையும், சில மாவட்டங்கள் கொஞ்சம் குறைவான கல்வியறிவையும் கொண்டுள்ளன. தமிழ்நாடு 100% கல்வியறிவு என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்து வந்தாலும் அதனை அடைவதற்கு இன்னும் பல சவால்கள் உள்ளது. ஆனால் விரைவில் அந்த இலக்கை தமிழ்நாடு அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் பல வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்ட மாவட்டங்கள் இருந்தாலும் எந்த மாவட்டம் கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது, எந்த மாவட்டம் கல்வியறிவில் பின்தங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை
நிர்வாக வசதிக்காக, தமிழ்நாடு 5 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் 6 மாவட்டங்கள் அண்மையில் சேர்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்திய அளவில் மிகவும் முக்கியமான நகரமாக உள்ளது, உலகளவில் மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் பல தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ளது. இதுவே மாநிலத்தின் மிகப்பெரிய பெருநகரப் பகுதியாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் மாநிலத்தின் ஆட்சி, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரப் பன்முகத்தன்மைக்கு பங்களிக்கிறது.
தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம்
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.09% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 86.77% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 73.44% ஆகவும் உள்ளது. தமிழ்நாடு கல்வியறிவில் குறிப்பிட்ட வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், பாலின இடைவெளி இங்கு அதிகமாவே உள்ளது. இது மாநிலம் முழுவதும், குறிப்பாகப் பெண்களுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கான தேவையை உணர்த்துகிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
1,506,843 மக்கள்தொகை கொண்ட தருமபுரி மாவட்டம், 68.54% என்ற எழுத்தறிவு விகிதத்துடன் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த மக்கள்தொகையில், 917,709 பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளார்கள். கல்வியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தருமபுரி மாவட்டம் மாநில சராசரியை விட பின்தங்கியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில், கல்வி வளங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பற்றாக்குறை மற்றும் சாதிய மோதல்கள் போன்ற சவால்களை இது எதிர்கொள்கிறது.
இதைத்தொடர்ந்து 754,894 மக்கள்தொகை கொண்ட அரியலூர் மாவட்டம், 71.34% எழுத்தறிவு விகிதத்துடன் தமிழ்நாட்டில் இரண்டாவது மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதில், 480,604 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். அரியலூர் தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், கல்வித் துறையில் சவால்களை எதிர்கொள்கிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு மாவட்டங்களின் கல்வியறிவு விகிதம்:
1. கன்னியாகுமரி - 91.75%
2. சென்னை - 90.18%
3. தூத்துக்குடி - 86.16%
4. நீலகிரி - 85.20%
5. காஞ்சிபுரம் - 84.49%
6. திருவள்ளூர் - 84.03%
7. கோயம்புத்தூர் - 83.98%
8. நாகப்பட்டினம் - 83.59%
9. மதுரை - 83.45%
10. திருச்சிராப்பள்ளி - 83.23%
11. திருவாரூர் - 82.86%
12. தஞ்சாவூர் - 82.64%
13. திருநெல்வேலி - 82.50%
14. ராமநாதபுரம் - 80.72%
15. விருதுநகர் - 80.15%
16. சிவகங்கை - 79.85%
17. வேலூர் - 79.17%
18. திருப்பூர் - 78.68%
19. கடலூர் - 78.04%
20. தேனி - 77.26%
21. புதுக்கோட்டை - 77.19%
22. திண்டுக்கல் - 76.26%
23. கரூர் - 75.60%
24. நாமக்கல் - 74.63%
25. பெரம்பலூர் - 74.32%
26. திருவண்ணாமலை - 74.21%
27. சேலம் - 72.86%
28. ஈரோடு - 72.58%
29. விழுப்புரம் - 71.88%
30. கிருஷ்ணகிரி - 71.46%
31. அரியலூர் - 71.34%
32. தருமபுரி - 68.54%



Click it and Unblock the Notifications
