Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
Tamil Nadu Day 2023: தமிழ்நாடு பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
Tamil Nadu Day 2023: தமிழ் மக்களின் சொந்த நிலமான தமிழ்நாடு, இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பும், பின்பும் சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் கூட, நம் தமிழ்நாட்டிற்கு பழைய பெயர் வைத்து தான் அழைக்கப்பட்டன.
மொழிவாரியாக பிரித்து உருவாக்கப்பட்ட நவம்பர் 01 ஆம் தேதியை கர்நாடகா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடுகின்றன. ஆனால் அந்த நவம்பர் 1 ஆம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாட தமிழ்ர்களுக்கு விருப்பமில்லை. இதற்கு முக்கிய காரணம் பெயர் தான்.

தமிழ்நாடு என்ற பெயரை பெற 1956 ஆம் ஆண்டு முதலாக போராடி, அதற்காக சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். கடைசியில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று அப்போது முதல்வராக இருந்த பேரறிஞார் அண்ணா பெயரை மாற்றினார். அப்போது முதலாக சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இப்படி தமிழ்நாடு என்ற பெயரை பெற்ற நாளை தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நாள் என அறிவித்தார். இதனால் தமிழ்நாடு நாள் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு நாள் என்பதால் தமிழ்நாடு பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைக் காண்போம்.
1. தமிழ்நாடு இந்தியாவின் 10 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் 6 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராகவும் உள்ளது.
2. தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ளன.
3. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய நடனம் என்றால், அது பரத நாட்டியம்.
4. பிரிட்டிஷ் காலத்தில் தமிழ்நாடு மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்டது.
5. தமிழ்நாட்டில் 60% தீப்பெட்டி குச்சிகளும், 77% ரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
6. தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் என்றால், அது கோலாட்டம், கரகம் மற்றும் மயிலாட்டம் ஆகும்.
7. 1986 ஆம் ஆண்டில் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டு தமிழ்நாடு ஒரே மாநிலமாக மாறியது.
8. மனித வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.
9. தமிழ்நாட்டில் காஞ்சிபுர மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாகும். மேலும் மக்கள்தொகையில் அடிப்படையில் சென்னை மிகப்பெரிய மாவட்டம்.
10. இந்தியாவின் பசுமைப் புரட்டியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான்.
11. தமிழ்நாடு வடமேற்கில் கர்நாடகா, வடக்கில் ஆந்திரா மற்றும் மேற்கில் கேரளா என 3 மாநிலங்களின் எல்லையைக் கொண்டுள்ளது.
12. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் என்றால், அது லிக்னைட், சுண்ணாம்பு, மேக்னசைட், மைக்கா, குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், பாக்சைட், ஜிப்சம் ஆகும்.
13. தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் பழனி மலைகள் உள்ளன. மிகவும் பிரபலமான மலைப்பிரதேசமான கொடைக்கானல் தமிழ்நாட்டில் தான் அமைந்துள்ளது.
14. இந்தியாவிலேயே வாழைப்பழம், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் மாம்பழம், தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாகும்.



Click it and Unblock the Notifications