என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை... மோசமான விஷயத்தில் முதலிடம் பிடித்த மதுரை... என்ன விஷயம் தெரியுமா?

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள ஒரு வித்தியாசமான நாடாகும். இந்தியாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. சில நகரங்கள் தொழில்நுட்பரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்தவையாக இருக்கும், அதேபோல சில நகரங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும். நகரத்தின் சுத்தமும் இதே போல்தான், சில நகரங்கள் மிகவும் சுத்தமானதாக இருக்கும், சில நகரங்கள் சுகாதாரத்தில் பின்தங்கியிருக்கும்.

'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தால் பல நகர்ப்புற மையங்கள் சுத்தமானதாக இருக்கும் என்று நம்பிக்கையை சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கை தவிடுபொடியாக்கியுள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2025 அறிக்கையின்படி இந்தியாவின் 10 அசுத்தமான நகரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Swachh Survekshan 2025 Top 10 Dirtiest Cities in India

மதுரை

இந்த பட்டியலில் முதலிடத்தில் மதுரை இருப்பது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 'கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படும் மதுரை, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடி வருவதால், 4,823 புள்ளிகளுடன் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது.

லூதியானா

பஞ்சாபின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றான லூதியானா, 5,272 மதிப்பெண்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தொழில் துறையின் வேகம் அதன் சுகாதார வளர்ச்சியை வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை

நமது மாநில தலைநகரமான 'சிங்கார' சென்னை 6,822 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கழிவுகளைப் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், சென்னையின் மக்கள் தொகையும், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்களும் நகரத்தை அசுத்தமான நகரங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது.

ராஞ்சி

ஜார்கண்ட்டின் தலைநகரமான ராஞ்சி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 6,835 மதிப்பெண்களுடன், இந்த நகரம் குப்பைகளை அகற்றுவதிலும் பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்கிறது.

பெங்களூர்

இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூரு, இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் பெங்களூர் முக்கியமான நகரமாக இருந்தபோதிலும், பெங்களூர் நகரத்தின் திட்டமிடப்படாத நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் சீரற்ற கழிவு மேலாண்மை ஆகியவை தொடர்ச்சியான சுகாதார பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

தன்பாத்

ஜார்கண்ட்டின் இரண்டாவது பெரிய நகரமான தன்பாத் 7,196 மதிப்பெண்களுடன், இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. நிலக்கரி சுரங்கத் தொழிலுக்குப் பெயர் பெற்ற தன்பாத் நகரம், தொழில்துறை மாசுபாடு மற்றும் மோசமாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியால் தொடர்ந்து அசுத்தத்துடன் போராடி வருகிறது.

ஃபரிதாபாத்

7,329 மதிப்பெண்களுடன் ஹரியானாவின் மிகப்பெரிய நகரமான ஃபரிதாபாத் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. மோசமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் போதுமான பொது சுகாதாரமின்மை போன்ற பிரச்சினைகளால் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை முக்கியத்துவம் இருந்தபோதிலும், ஃபரிதாபாத் சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடி வருகிறது.

கிரேட்டர் மும்பை

கிரேட்டர் மும்பை 7,419 மதிப்பெண்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. கழிவு மேலாண்மை, கூட்ட நெரிசல் மற்றும் பொது சுகாதாரம் போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளால் இந்த நகரம் சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளது.

ஸ்ரீநகர்

இந்தியாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஸ்ரீநகர் இந்தியாவின் அசுத்தமான நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 7,488 மதிப்பெண்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்ரீநகரின் தூய்மைப் பிரச்சினைகளுக்கு அதன் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே முக்கியக் காரணமாக உள்ளது.

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லி, ஸ்வச் சர்வேக்ஷன் 2025 இன் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் பத்தாவது இடம் பிடித்துள்ளது. 7,920 மதிப்பெண்களுடன், காற்று மற்றும் கழிவு மாசுபாட்டால் நகரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 11, 2025, 12:26 [IST]
Desktop Bottom Promotion