Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சூரியன் மீன ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயல் அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ஒன்பது கிரகங்களில் சூரியன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட கிரகமாக கருதப்படுகிறது. இது ஆன்மாவின் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது மார்ச் 14 அன்று சூரியன் மீன ராசியில் நுழைகிறார். இந்த மாற்றம் பலரது வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும்.

மீன ராசியை புதன் ஆட்சி செய்கிறது. சூரியன் ஆன்மா, உயர் பதவி, கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவற்றை வழங்கும் என்று கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் தரும். சூரியன் மீன ராசியில் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த தருணத்தில் உங்கள் வணிகத்தை சிறப்பாக நிர்வகிக்க நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பல்வேறு பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்வில் உங்கள் துணையுடன் ஈகோவால் சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் துணையிடம் கர்வத்தை வெளிப்படுத்தாதீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்யும் எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள். இந்த நேரத்தில் உங்களின் பல ஆசைகளை நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் முதலீடுகளில் இருந்து அதிக வருமானத்தை எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் உங்கள் முதலீடுகள் இந்த நேரத்தில் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். உங்கள் திட்டங்களைப் பற்றி யாரிடமும் முன்கூட்டியே சொல்லாதீர்கள். இதனால் உங்களின் திட்டங்கள் தோல்வியை தழுவலாம்.
தனுசு
மீன ராசியில் சூரியனின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உங்கள் வீட்டின் சூழ்நிலை ஆன்மீகம் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறலாம். இல்லற வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
உங்கள் தாயுடனான உங்கள் உறவும் ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். உங்கள் வேலையை பாதிக்கும் சில விஷயங்களால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதனால் அலுவலக சூழல்கள் உங்களுக்கு எதிர்மறையாக மாறலாம்.
மகரம்
மீன ராசியில் சூரியனின் சஞ்சாரத்தின் போது, மகர ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனநிலையில் அதிக கவனம் வேண்டும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு மிகவும் சுமுகமாக இருக்காது.
ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது கடுமையான பிரச்சினைகளுக்கும், செலவினங்களுக்கும் வழிவகுக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி இழப்பு அல்லது கடன்பிரச்சினையை சந்திக்க நேரிடும். எனவே முடிந்தவரை உங்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
ஜோதிட தீர்வுகள்
சூரியனின் இந்த சஞ்சாரத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கவும். சிவப்பு நிற ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது நன்மை தரும். ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு மாதுளை தானம் செய்தால் சூரிய தோஷங்கள் குறையும். செம்புப் பாத்திரத்தில் ஒரு சிட்டிகை சாம்பலைப் போட்டு சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்தால் சூரியனின் அசுப பலன்கள் பாதிக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

