Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இன்று இரவு வானில் தெரியும் 'சூப்பர் ப்ளூ மூன்' - இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Super Blue Moon 2023: வேத ஜோதிடத்தில் சந்திரன் மிகவும சக்தி வாய்ந்த கிரகம் மற்றும் இது இயற்கையையும், மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. சந்திரன் 2 1/2 - 3 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அமாவாசை, பௌர்ணமி என்று சந்திரனின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான வானியல் நிகழ்வு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அதாவது இன்று நிகழவுள்ளது. சூப்பர் ப்ளூ மூன் நாளில் சந்திரனானது பௌர்ணமி நாளில் வெளியிடும் வெளிச்சத்தை விட, கூடுதல் பிரகாசமாகவும், மிகவும் பெரியதாகவும் தெரியும்.

பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி மற்றும் ஒரு அமாவாசை தான் வரும். ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 பௌர்ணமி வருகிறது. அதில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வருவது இரண்டாவது பௌர்ணமியாகும்.
இந்த சூப்பர் ப்ளூ மூன் இன்று இரவு 8.37 மணிக்கு பளிச்சென்று மிகவும் பெரியதாகவும், பிரகாசமாகவும் தெரியும். கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால், அது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த சூப்பர் ப்ளூ மூன் 12 ராசிகளிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
வானில் நிகழும் சூப்பர் ப்ளூ மூனால் மேஷ ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். இன்று இந்த ராசிக்காரர்கள் வழக்கத்தை விட மிகவும் டென்சனாக இருப்பார்கள். எனவே எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அதை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இருப்பினும், எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், அதை நன்கு புரித்து யோசித்து எடுத்தால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த அரிய நிகழ்வால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக, பண வரவு சிறப்பாக இருக்கும். மேலும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வால் கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறக்கூடும். தொழில் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூப்பர் ப்ளூ மூன் செயல்களுக்கு ஏற்ற பலனைத் தரும். கடந்த சில நாட்களாக அல்லது மாதங்களாக நீங்கள் செய்து வந்த நற்செயல்களின் பலனை இன்று பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களின் திட்டங்களை தீர்மானிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்நாள் சிறப்பானதாக இருக்கும். இந்த திட்டங்களால் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்நாள் கலவையானதாக இருக்கும். நிதி ரிதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும் மற்றும் இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூப்பர் ப்ளூ மூன் அனைத்து வழிகளிலும் சிறப்பாக இருக்கும். இன்று எந்த காரியத்தை நீங்கள் மேற்கொண்டாலும், அதில் தடைகள் அல்லது பிரச்சனைகள் எதுவும் வராது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கியமான வேலை இன்று வெற்றிகரமாக முடிவடையும். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பண ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் பணப்பிரச்சனைகள் எதுவும் இருக்காது. புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். மொத்தத்தில் இக்காலம் சாதகமானதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சூப்பர் ப்ளூ மூன் சில நற்செய்திகளைக் கொண்டு வரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடினமான முடிவுகளை எடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ஆனால் எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், சுற்றியிருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications