Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
சூரியன் சுக்கிரனால் உருவாகும் ராஜபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Venus Make Rajbhang Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் கடக ராசிக்கு வருகிறார். இந்நிலையில் சூரியனும் கடக ராசியில் பயணித்து வருவதால், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் ராஜபங்க ராஜயோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண வரவையும், வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராஜபங்க ராஜயோகமானது அற்புதமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது முதல் வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். தொண்டு மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு வணிகத்தில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
ராஜபங்க ராஜயோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரும். ஏனெனில் இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்துடன் வளர்ச்சியும் ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராஜபங்க ராஜயோகம் நல்ல வெற்றியைத் தரும். ஏனெனில் இந்த யோகமானது 4 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறக்கூடும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications