Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: மே 19 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
Sukraditya Rajyog: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மே 14 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படும் சுக்கிரன் மே 19 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியின் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன் லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது ரிஷப ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் தொழிலில் வளர்ச்சி காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பள உயர்வும் கிடைக்கலாம். வணிகர்கள் இந்த யோகத்தால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுகூர்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த காலத்தில் செய்ப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் சற்று அழகாக காட்சியளிப்பீர்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications