Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
சனி மற்றும் சூரியனின் அருளால் ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..!
Sun Transit, Saturn Retrograde On June 2023: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.
அந்த வகையின் ஜூன் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. குறிப்பாக ஜூன் 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார். இது தவிர கும்ப ராசியில் பயணித்து வரும் சனி, ஜூன் 17 ஆம் தேதி அந்த ராசியில் வக்ரமாகிறார்.

ஜூன் மாதத்தில் சூரியன் மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளது. இப்போது 2023 ஜூன் மாதத்தில் சூரிய, சனி நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஜூன் 15-க்கு பின் மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
ஜூன் 15-க்கு பின் சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் ஜூன் மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
கன்னி
ஜூன் 15-க்கு பிறகு கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் சனி 6 ஆவது வீட்டில் வக்ரமாகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் இம்மாதத்தில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதனால் பணியிடத்தில் உங்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
ஜூன் 15-க்கு பின் மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். என்ன தான் ராசிநாதன் சனி வக்ர நிலையில் இருந்தாலும், மகர ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார். அதிர்ஷ்டத்தினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை கடனால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் கடனில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications