Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
சூரிய பெயர்ச்சியால் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கப் போகுது...
Sun Transit In Virgo On September 2023: கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கும். அந்த வகையில் சூரியன் 2023 செப்டம்பர் 17 ஆம் தேதி புதனின் ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்தார். சூரியன் கன்னி ராசியில் நுழைந்ததால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் தெரியும்.

குறிப்பாக சூரியன் தனது நண்பனின் ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் இப்பெயர்ச்சியால் சிறப்பான தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திப்பார்கள். இப்போது கன்னி செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பல மோசமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் பணம் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுகள் பாதிக்கப்படக்கூடும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். கும்ப ராசியின் அதிபதி சனி. சூரியனும், சனியும் எதிரிகளாக கருதப்படுவதால், இந்த சூரிய பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. பல மோசமான பலன்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் முடிவுகள் பல மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கலாம். உடன் பிறந்தோருடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பண பிரச்சனையால் சிரமப்படக்கூடும். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் உங்கள் பேச்சு கடுமையாக இருப்பதால், அந்த பேச்சாலேயே பல பிரச்சனைகளை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பணிச்சுமைகளை சந்திக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications