Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
கன்னியில் இருக்கும் சூரியனால் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்...
Sun Transit In Virgo on September 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அதில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கும். அந்த வகையில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் செப்டம்பர் 17 ஆம் தேதி நுழைந்தார்.

சூரியன் கன்னி ராசியில் நுழைந்ததால், தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. சூரியன் கன்னியில் நுழைந்துள்ளதால், அடுத்த ஒரு மாத காலம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் இருக்கும். இப்போது கனனி ராசியில் பயணிக்கும் சூரியனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் சிறப்பாக இருக்கும். மேலும் சூரியன் 12 ஆவது வீட்டைப் பார்ப்பதால், அதிக செலவுகளுடன் அலைச்சலையும் சந்திக்க நேரிடும். அதோடு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளிடம் இருந்து நற்செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள், நல்ல வெற்றியைக் காண்பார்கள். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடம். வேலையை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் காத்திக்க வேண்டும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முக்கியமாக இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் ஓரளவு நன்றாக இருக்கும். மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் அடுத்த மாத காலம் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். சிலர் குடும்பதினருடன் சுற்றுலாவிற்கு திட்டமிடலாம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத நற்பலன்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. செலவுகள் செய்யும் போது உங்கள் பட்ஜெட்டை நினைவில் வைத்து செலவிட அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. பணபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல செய்தியைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் அரசு வேலை செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள் நல்ல பண ஆதாயத்தைப் பெறுவார்கள். அடுத்த ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இக்காலமானது இந்த ராசிக்காரர்களுக்கு சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் சிறு விஷயங்களுக்கும் பெரிய சண்டை ஏற்பட்டு, குடும்ப சூழல் அமைதியிழந்து இருக்கும். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாத காலம் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் துணையுடன் சண்டையில் ஈடுபடலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சூரியன் இரண்டாவது வீட்டை பார்ப்பதால், ஓரளவு பணத்தை சேமிக்க முடியும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இக்காலமானது மீன ராசிக்கார்களுக்கு சாதகமாக இருக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மற்றும் நிதி பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications