Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
கன்னி செல்லும் சூரியனால் செப்டம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்போகுது..
Sun Transit In Virgo On 17 September 2023: நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது தனது சொந்த ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி புதனின் கன்னி ராசிக்கு செல்கிறார். சூரியனுக்கும் புதனுக்கும் நட்புறவு உள்ளது. எனவே இந்த சூரிய பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலுமே சற்று சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். மேலும் சமூகத்தில் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறவுள்ளார்கள். இப்போது கன்னி ராசிக்கு செல்லும் சூரியனால் தொழிலில் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நிறைய ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம். வெளிநாடு செல்ல நினைப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாள் ஆசைகளை சூரிய பகவான் நிறைவேற்றுவார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த காலம். மேலும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications