Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு சிறப்பா இருக்கப்போகுது...
Sun Transit In Uthirattathi Nakshatra On March 2024: நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு 14 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
தற்போது சூரியன் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானர் மார்ச் 17 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சூரியன் சென்றுள்ளார்.

உத்திரட்டாதி நட்சத்திரமான சனி பகவானின் நட்சத்திரமாகும். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் மார்ச் 31 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சூரியன் சென்றதால், சில ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் காணவுள்ளார்கள். அதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளையும் காண்பார்கள். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைத் தரும். தைரியம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தொழில் ரீதியாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications