Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
சூரிய பெயர்ச்சியால் மே 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Sun Transit In Taurus: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் காணப்படும்.
அந்த வகையில் மேஷ ராசியில் பயணித்து வரும் சூரியன் மே 15 ஆம் தேதி காலை 11.32 மணிக்கு ரிஷப ராசிக்கு செல்கிறார். சூரியன் இந்த ரிஷப ராசியில் ஜூன் 15 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் புதனின் மிதுன ராசிக்கு செல்வார்.

சூரியன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் நுழையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். தாயால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். அரசு வேலை செய்பவர்கள் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். குழந்தைகளால் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. விருப்பங்கள் அனைத்தும் இக்கால கட்டத்தில் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் நிலை வலுபெறும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளன. சமூகத்தில் பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் மிகவும் அன்பாக இருப்பீர்கள். மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் செய்து முடிப்பீர்கள். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக இக்காலம் உங்கள் வாழ்க்கை துணைக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications