Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Taurus 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் 2023 மே 15 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த ரிஷப ராசியின் ஜூன் 15 அன்று மிதுன ராசிக்குள் நுழைகிறார். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது வைகாசி மாதம் பிறக்கிறது.

சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தைக் கொண்டிருக்கும். சிலருக்கு சூரியனின் அருளால் தூங்கி கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கலாம், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்போது ரிஷபம் செல்லும் சூரியனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிவர்கள் அலுவலகத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் இயல்பில் மாற்றங்கள் ஏற்படலாம். திருமண வாழ்க்கை சற்று பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளால் உங்களின் டென்சன் அதிகரிக்கும். உங்கள் பேச்சை இக்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும். மனதிற்கு சந்தோஷம் தரும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இக்காலம் கலவையான பலன்களைத் தரும் காலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் தவறான புரிதல்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். நிதி நிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் துறையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளை இக்காலத்தில் வீழ்த்துவீர்கள். இருப்பினும் குடும்ப வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபரிபவர்களுக்கு இடமாற்றத்தற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் இக்காலத்தில் சண்டை அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆயினும், பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் கோபம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலமானது பணிபுரிபவர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை, இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆயினும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் ஈகோ அதிகரிக்கும். இதனால் குடும்ப உறவுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், இக்காலத்தில் குடும்பத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் கலவையானதாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் உடன்பிறந்தவர்களுடனான உறவு மோசமடையக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications