Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
சூரிய பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகுது..
Sun Transit in Taurus On 14 May 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் பதவி, மரியாதை, கௌரவம், வெற்றி, முன்னேற்றம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சூரியன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. மேலும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.
அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் சூரியன், மே 14 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் ரிஷப ராசியில் குரு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் மே 14 முதல் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நிலை வலுவடையும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களால் ஏதாவது ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள். பண வரவு அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். சிலருக்கு நல்ல சம்பளத்துடனான வேலை தேடி வரலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் அடுத்த ஒரு மாத காலம் வாழ்க்கை பிரசாகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
