Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சூரிய பெயர்ச்சி: இன்று முதல் ஜூன் 14 வரை இந்த 5 ராசிக்காரங்களுக்கு பண கஷ்டம் அதிகமா இருக்கும்.. உஷார்..
Sun Transit In Taurus 2024: நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரிய பகவான். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மற்றும் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நல்ல வெற்றியைத் தரும். இப்படிப்பட்ட சூரியன் மே 14 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். ரிஷப ராசியானது சுக்கிரனின் ராசியாகும்.
சூரியனும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாகும். இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு சற்று மோசமாக அதுவும் பண பிரச்சனைகளைத் தரும். இப்போது ரிஷப ராசியில் இருக்கும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இன்று முதல் அடுத்த ஒரு மாத காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை பலவீனமாக இருப்பதால், பணத்தை சேமிக்க முடியாது. மொத்தத்தில் நிதி ரீதியாக அடுத்த ஒரு மாத காலம் சற்று கஷ்டமாகவே இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் நிதி ரீதியாக சாதகமாக இருக்காது. அடுத்த ஒரு மாதம் திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பண கஷ்டத்தால் அவதிப்படநேரிடும். இந்த சூரிய பெயர்ச்சியால் செலவுகள் எதிர்பாராத அளவில் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது என்பது கடினமாக இருக்கும். எந்த முதலீடுகளையும் செய்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். லோன் எடுக்க திட்டமிட்டிருந்தால், அதை இக்காலத்தில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த ஒரு மாதம் பண விஷத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி முதலீடுகளை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் நிதி ரீதியாக சாதகமாக இல்லை. கவனக்குறைவாக இருந்தால், நிறைய இழப்புக்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக பண விஷத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். எதிர்பார்த்த அளவில் பணத்தை சம்பாதிக்க முடியாது. இதனால் பணத்தை சேமிக்கவும் முடியாது. பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் வருமானம் சற்று உயரும். இருப்பினும அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால், வியாபாரிகளால் லாபத்தைப் பெற முடியாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications