Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
சூரிய பெயர்ச்சியால் நவம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Scorpio On 17 November 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரிய பெயர்ச்சியின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 நவம்பர் 17 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லவுள்ளார். சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்.

இந்த செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வது சிறப்பானதாக இருக்கும். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது அற்புதமானதாக இருக்கப் போகிறது.
குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் புதிய சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கலாம். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். சிலர் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியையும், முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல பண பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் சில நல்ல வாபத்தைக் காண்பார்கள். புதிய வேலையை இக்காலத்தில் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பயணங்களால் நல்ல பண ஆதாயத்தைப் பெறக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் 17 முதல் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, சேமிக்கவும் முடியும். முதலீடுகளை செய்தால், அதில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள், நல்ல வெற்றியைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications