Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
ஒரு வருடத்திற்கு பின் தனுசு செல்லும் சூரியன்: டிசம்பர் 16 முதல் இந்த ராசிக்கு வாழ்க்கை பிரகாசமா இருக்கும்...
Sun Transit In Sagittarius On December 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. ஜோதிடத்தில் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.
தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்கு செல்கிறார். சூரியனும், குரு பகவானும் நண்பர்கள் என்பதால், டிசம்பரில் நிகழும் சூரிய பெயர்ச்சியானது சற்று சிறப்பானதாக இருக்கும்.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் சூரியனின் அருளைப் பெறவுள்ளார்கள். இதன் விளைவாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதோடு, நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் குடும்ப சூழலும் இனிமையாக இருக்கும். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் கிடைக்கும். கூட்டு வேலையை செய்பவர்கள் அல்லது செய்ய திட்டமிட்டிருந்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். முக்கியமாக இந்த சூரிய பெயர்ச்சிக்க பின் தைரியம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய சொத்து மற்றும் வாகனங்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள உங்களின் சில முக்கியமான வேலைகள் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தாயுடனான உறவு வலுபெறும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இருமடகு அதிகரிக்கும். உங்களின் திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். உறவுகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications