Latest Updates
-
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க..
சூரிய பெயர்ச்சியால் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்கு பண மழை பொழியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Sagittarius On December 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைந்தார்.
சூரியன் தனுசு ராசியில் பயணிக்கும் போது தான் மார்கழி மாதம் பிறக்கிறது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது தனுசு ராசியில் பயணிக்கும் சூரியனால் அடுத்த ஒரு மாத காலம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. யாரையேனும் காதலித்து வந்தால், அந்த காதலை அவர்களிடம் சொல்ல நினைத்தால், அதை இக்காலகட்டத்தில் வெளிப்படுத்தினால் நல்ல பதிலைப் பெறக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நம்பிக்கையின்மையை உணர்வார்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். புதிய வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதை இக்காலத்தில் வாங்க வேண்டாம். ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நிதி நிலை உறுதியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் திருமணமானவர்களுக்கு அடுத்த ஒரு மாதம் சாதகமாக இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் ஈகோ மோதல்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் ரீதியாக, உங்களின் தகவல்தொடர்பு திறன் மற்றும் தன்னம்பிக்கையான நடத்தை நல்ல வெற்றியைப் பெற வைக்கும்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சூரியன் 6 ஆவது வீட்டில் இருப்பதால், உங்கள் எதிரிகளை அவர் அடக்குவார் நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக திட்டமிட அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தைகளால் பெருமைப்படுவீர்கள். ஆனால் அன்புக்குரியவர்களுடன் மோதல்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இக்காலத்தில் ஈகோ பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி ரீதியாக, இக்காலம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, வாகனம் வாங்குவது, பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றில் நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும். மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். உங்கள் பேச்சில் நம்பிக்கையும், அதிகாரமும் தெரியும். இது மற்றவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மார்கெட்டிங், சோஷியல் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். தந்தை மற்றும் குருவின் ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். அடுத்த ஒரு மாதம் நீங்கள் அதிகாரத்துடனும், கட்டளையுடனும் பேசுவீர்கள். கஷ்ட காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். இதனால் அவர்களுடனான பிணைப்பு இன்னும் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக உங்களின் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறமையால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சவாலான சூழ்நிலைகளை தங்களின் திறமையால் எளிதில் சமாளித்து, அவற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அடுத்த ஒரு மாதம் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இக்காலத்தில் காணலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையின் தேவையை பூர்த்தி செய்ய நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல நிலையை விரைவில் அடையலாம். இக்காலத்தில் அனைவரது ஆதரவும் உங்களுக்குகிடைக்கும். பணியிடத்தில் உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்கள் மற்றவர்களால் மதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications