Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப் போகுது..
Sun Transit In Rohini Nakshatra: நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
இந்த சூரியன் மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ரோகிணி நட்சத்திரத்திற்குள் மே 25 ஆம் தேதி நுழைந்துள்ளார்.

இந்த ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் ஜூன் 08 ஆம் தேதி வரை இருப்பார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். மிகவும் வெப்பமான சூரியன், குளிர்ச்சியான சந்திரனின் நட்சத்திரத்திற்கு சென்றிருப்பதால், அது பூமியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷடத்தைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது சூரியன் ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதோடு, திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் மிகுந்த ஊக்கமும், லட்சியமும் கொண்டிருப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தல் உங்கள் எதிரிகளை வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் தலைமைத்துவ திறன் நன்றாக இருக்கும். முகம் சற்று பொலிவோடு இருக்கும். இக்காலகட்டத்தில் நீங்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் திகழ்வீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நற்பெயருடன், நல்ல ஊதியத்தையும் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏதேனும் தொழில் செய்து வந்தால், அதில் நல்ல லாபத்துடன் முன்னேற்றமும் ஏற்படும். இக்காலகட்டத்தில் உங்கள் ஆளுமை சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்க விரும்புவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இக்காலத்தில் அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு அற்புதமாக இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். மொத்தத்தில், இக்காலம் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவார்கள். உங்கள் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் மீதான மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இராணுவத்தில் இருப்பவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள், இக்காலகட்டத்தில் நற்பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

