Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சூரியனின் அருளால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Poosam Nakshatra 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது சூரியன் நட்சத்திரங்களையும் மாற்றுவார்.
அந்த வகையில் 2023 ஜூலை 16 ஆம் தேதி சூரியன் சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே சூரியனின் நட்சத்திர மாற்றம் நிகழ்கிறது. அதுவும் ஜூலை 20 ஆம் தேதி, அதாவது இன்று சூரியன் பூச நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார்.

இப்படி சூரியன் பூச நட்சத்திரத்திற்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். கீழே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றமானது பலவிதமான நன்மைகளைத் தரும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சூரியனின் அருளால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் திறமைகள் இருமடங்கு அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். இக்காலத்தில் உங்களின் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
விருச்சிகம்
சூரியன் பூச நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட சமாளிப்பார்கள். தந்தையிடம் இருந்து சில ஆலோசனைகள் கிடைக்கும். அந்த ஆலோசனையால் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் நற்பலனைப் பெறுவார்கள். சொத்து தொடர்பான பிரச்சனையை இதுவரை சந்தித்து வந்தால், சூரியனின் அருளால் அப்பிரச்சனை நீங்கி நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் தன்னம்பிக்க அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.
மீனம்
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் மீன ராசிக்காரர்கள் பெரிய சாதனையை புரிவார்கள். வியாபாரம் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இக்காலத்தில் உங்களின் எதிரிகளை வெல்வீர்கள். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications