Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 31 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கப் போகுது..
Sun Transit In Pooratathi Nakshatra On Raksha Bandhan 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அப்படி கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ரக்ஷா பந்தன் நாளில், அதாவது ஆகஸ்ட் 31 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். மேலும் எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நல்ல வெற்றியை காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களைத் தரும். குறிப்பாக திடீர் பண பலன்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான நன்மைகளைத் தரும். எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அபரிமிதமான நன்மைகளைத் தரும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைப்பதோடு, நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications