Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
சூரிய பெயர்ச்சியால் அக்டோபர் 18 முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
Sun Transit In Libra On October 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதுண்டு. அப்படி சூரியன் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதோடு சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் அக்டோபர் 18 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால் ஐப்பசி மாதம் பிறக்கிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒருசில மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக துலாம் ராசிக்கு சூரியன் செல்வதால், இக்காலத்தில் சூரியன் சற்று பலவீனமாக இருப்பார்.

அதோடு பலவீனமாக சூரியன் இருப்பதால் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால், எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அக்டோபர் 18 முதல் மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. இதனால் நீங்கள் சற்று வருத்தப்படக்கூடும் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
அலுலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை புறக்கணிப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களால் போதுமான லாபத்தைப் பெற முடியாது. கூட்டு தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இல்லாவிட்டால், அதுவே உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். வியாபாரம் செய்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிக உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் உங்களின் வேலையில் நிறைய இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
புதிய வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். உங்களின் பிரச்சனைகள் அல்லது ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதனாலேயே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications