Latest Updates
-
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
சூரிய பெயர்ச்சி: அக்டோபர் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Libra On 18 October 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் அக்டோபர் 18 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். துலாம் ராசியானது சுக்கிரனின் ராசி. சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால், ஐப்பசி மாதம் பிறக்கிறது.

சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறவுள்ளார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசிக்கப் போகிறது. இப்போது துலாம் ராசிக்கு செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் நற்பலனை வாரி வழங்குவார். முக்கியமாக இக்காலத்தில் சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வழக்கத்தை விட அதிகளவு பணத்தை சேமிக்க முடியும். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு அக்டோபர் 18 முதல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளைக் கொண்டவர்கள், அந்த குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 18 முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக காதலிப்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக சூரியனின் அருளால் இக்காலத்தில் தைரியமும், வீரமும், தன்னம்பிக்கையும் அதிகம் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications