Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கப் போகுது...
Sun Transit In Libra on October 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் இன்று அதிகாலை 01.42 மணிக்கு சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார். துலாம் ராசியில் சூரியன் நுழைந்ததால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது.

துலாம் ராசியானது சூரியன் பலவீனமாக இருக்கும் ராசியாகும். இந்த ராசியில் சூரியன் பயணிப்பதால், இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண முடியாமல் தவிப்பதோடு, நம்பிக்கையில் சரிவுகளும் ஏற்படக்கூடும். அதே சமயம் இன்னும் சில ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறலாம். இப்போது துலாம் ராசியில் அடுத்த ஒருமாத காலம் பயணிக்கும் சூரியனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாத காலம் சவாலானதாக இருக்கும். தொழிலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. நிதி இழப்புக்களைத் தவிர்க்க கூட்டு தொழில் செய்யும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்ககாக நிறைய பணத்தை செலவிடக்கூடும். உறவுகளில் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் சவால்களையை சந்திக்க நேரிடும். சிலருக்கு வேலை போக வாய்ப்புள்ளது. அலுவலகச் சூழல் சற்று கடினமாக இருக்கும். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமாகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைசுற்றல், செரிமான பிரச்சனைகள் மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இப்பெயர்ச்சியால் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் தொழில் ரீதியாக ஏற்படும் இடையூறுகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புதிய வேலையைத் தொடங்குவதாக இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் அதிக போட்டி காரணமாக சவால்களை சந்திக்க நேரிடும். திட்டமிட்டு பணத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளிடையே தவறான புரிதலால் மோதல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலியால் அவதிப்படக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக மற்றும் தொழில் ரீதியாக சவால்களை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் சற்று குறைவாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் வரலாம்.
ஆனால் வணிகர்களுக்கு நல்ல வாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் வருமானத்தில் பின்னடைவை சந்திக்க நேரிடும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பெற முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகள் மற்றும் அலர்ஜியை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். வேலை மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத பயணங்கள் அதிருப்தியை ஏற்படுத்தும். வணிகர்கள் சில இழப்புக்களை சந்திக்கலாம்.
செலவுகள் அதிகரிப்பதால் நிதி ரீதியாக கஷ்டப்படலாம். உறவுகளைப் பொறுத்தவரை, ஈகோ தொடர்பான மோதல்களை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளையும், குடும்ப பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, வேலைப்பளு, உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போகும். வியாபாரத்தில் கடுமையான போட்டியால் லாபம் கலந்த நஷ்டத்தைப் பெறக்கூடும். அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஈகோவால் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் மற்றும் பற்களில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி பிரச்சனைகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் லாபம், நஷ்டம் ஆகிய இரண்டுமே கிடைக்கலாம். செலவுகள் அதிகரிப்பதால் சில சிரமங்களை சந்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக முன்னேற்றத்தைக் காணலா. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முதுகு வலியால் அவதிப்படக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. பணியிடத்தில் அதிக வேலைப்பளு மற்றும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போகும். வணிகர்கள் சவால்களையும், இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடி ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலியால் அவதிப்படக்கூடும். தாயின் ஆரோக்கியம் மோசமாவதால், நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாத காலம் தங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள். குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போகும். தொழில் முயற்சிகளால் நிதி இழப்புகள் ஏற்படலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உறவுகளில் நல்லிணக்கம் இல்லாமல் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்கலாம். இதனால் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











