Latest Updates
-
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!
துலாம் செல்லும் சூரியனால் உருவாகும் அசுப யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Sun Transit In Libra Make Inauspicious Yoga: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் சுக்கிரனின் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.
துலாம் ராசியில் சூரியன் பலவீனமாக இருப்பார். இதனால் நற்பலனை விட கெடு பலனைப் பெறக்கூடும். அதோடு இந்த ராசியில் ஏற்கனவே செவ்வாயும், கேதுவும் பயணித்து வருகிறார்கள். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் கொடூரமான அசுப யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்திலும், ஆரோக்கிய விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த அசுப யோகத்தால் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அடுத்த ஒரு மாத காலம் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் வேலைக்கே ஆப்பு வைத்துவிடும். ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு பண இழப்புகள் ஏற்படலாம். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்கக்கூடும். சில முக்கியமான வேலைகள் தடைபடலாம். எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அசுப யோகமானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் மீது வீண் பழி சுமத்தப்படலாம். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் பட்ஜெட் பாழாகும்.
இக்காலத்தில் உங்களுக்கு கோபம் அதிகம் வரும். இந்த கோபத்தால் பல மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கை டென்சன் நிறைந்ததாக இருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications