Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
சூரிய பெயர்ச்சியால் உருவான நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப் போகுது...
Sun Transit In Libra Made Neech Bhang Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் 2023 அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். துலாம் ராசியில் சூரியன் பலவீனமாக இருப்பார். அதோடு துலாம் ராசியில் சூரியன் நுழைந்ததால் நீச்சபங்க ராஜயோகமும் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சூரியனால் உருவான நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நீச்சபங்க ராஜயோகமானது நற்பலனைத் தரும். குறிப்பாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்கள் பணம் எங்கேனும் சிக்கியிருந்தால், அது இந்த காலகட்டத்தில் கைக்கு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். அதுவும் புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். பண வரவால் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். குறைவான கடின உழைப்பிலேயே நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகமானது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். வெளியூர் சென்று வேலை அல்லது படிக்க முயற்சிப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications