Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சிம்மம் செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்...
Sun Transit In Leo On August 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். கடக ராசியானது சந்திரன் ஆளும் ராசி.
இந்நிலையில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசியில் சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. 12 மாதங்கள் கழித்து சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைவது சிறப்பானது.

இருப்பினும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில், சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், இன்னும் சிலருக்கு மோசமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இப்போது சிம்மம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, பண வரவு இருந்தாலும், அதை விட அதிகமான செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தை சேமிக்க முடியாமல் போகும். எனவே பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது தொழில் வீடாகும். இதனால் இக்காலத்தில் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த ராசிக்காரர்களின் மனதில் கர்வத்தை அதிகரிக்கும். இதன் விளைவாக வரும் நாட்களில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். விமர்சனம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது. இதனால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். கும்ப ராசியின் அதிபதியான சனியுடன் பகை உணர்வு என்பதால் இந்த ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மேலும் பண பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications