Latest Updates
-
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஒரு வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Leo On 17 August 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். ஒரு வருடத்திற்கு பின் சூரியன் தனது சொந்த ராசிக்கு செல்கிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது சற்று சிறப்பானது மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

அதுவும் சொந்த ராசிக்கு சூரியன் செல்வதால், சூரியன் அதிக சக்தி வாய்ந்தவராக மாறுவார். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது மற்றும் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பங்குச் சந்தை, வங்கி தொடர்பான முடிவுகளில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதலிப்பவர்களின் பிணைப்பு இன்னும் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். வியாபாரத்தில் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள், திடீர் பொறுப்பைப் பெறக்கூடும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். மேலும் அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சூரியன் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, நாள்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications