Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஒரு வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Sun Transit In Leo On 17 August 2023: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அப்படி அவற்றின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் லட்சியம், தலைமைத்துவம், படைப்பாற்றல், கலை, ஆடம்பரம், ஈகோ, சமூக உருவம், சுய மரியாதை, அரசு ஆகியவற்றைக் குறிக்கிறார்.

இப்படிப்பட்ட சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியனின் சொந்த ராசி சிம்மம். இந்த சிம்ம ராசிக்கு சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மதியம் 01:23 மணியளவில் நுழைகிறார். இதனால் ஆவணி மாதம் பிறக்கிறது.
12 மாதங்களுக்கு பின் சிம்ம ராசிக்கு சூரியன் செல்வது சற்று சிறப்பானதாக இருக்கும் மற்றும் இந்த சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் அடுத்த ஒரு மாத காலம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். முக்கியமாக மாணவர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் சாதகமாக இருக்கும். அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி காண முடியும்.
ஆய்வு மற்றும் ஆக்கப்பூர்வமான வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும். ஆனால் காதல் விஷயங்களில் நாட்டம் சற்று குறைவாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக் குழப்பங்களைச் சந்திக்க நேரிடலாம். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிலம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு அல்லது வாகம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பெரிய சாதனை ஒன்றை படைப்பீர்கள். மிகுதியான ஆற்றலுடனும், தலைமைப்பண்புகளையும் கொண்டு இருப்பீர்கள்.
இதனால் மோசமான சூழ்நிலைகளையும் எளிதில் வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டைப் பெறும்ட. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத ஏற்றத்தாழ்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கண் பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். இக்காலத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், வெற்றி காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் மரியாதை, நிலை, பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அரசாங்கத்தின் ஆதரவு கிடைப்பதோடு, விருதுகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக இக்காலத்தில் முடிக்கப்படும்.
புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, இக்காலத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாத காலம் அதிகப்படியான செலவுகளையும், அலைச்சலையும் சந்திக்க நேரிடும். இதனால் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாத காலம் அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பெரிய வேலை-தொழில் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர விடாதீர்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ஒரு வரம் போன்று இருக்கும். பணியிடத்தில் உயர்அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தினால், பல வெற்றிகளை காண்பீர்கள்.
மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் மட்டுமின்றி, போட்டிகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆராய்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாத காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செய்யும் வேலைகள் நல்ல பாராட்டைப் பெறும்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சில சமயங்களில் உங்களின் வேலைகள் நின்றுவிட்டால், அதற்காக சோர்ந்து போகாமல் முயற்சி செய்தால், வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாதம் பல ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்பாராத நன்மைகளையும் பெறக்கூடும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பணியிடத்தில் சதிக்கு பலியாக வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இருப்பினும், சமூகத்தில் உங்களின் அந்தஸ்தும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாத காலத்தில் பலவிதமான அனுபவங்களை சந்திப்பீர்கள். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் தாமதம் ஏற்படும். வாழ்க்கையில் சற்று கசப்புகள் இருக்கும். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரசு தொடர்பான எந்த வேலைகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த மாத காலம் மீன ராசிக்காரர்களுக்கு வரம் போன்றதாக இருக்கும். எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அது நல்ல பலனை அளிக்கும். ரகசிய எதிரிகள் இக்காலத்தில் தோற்கடிக்கப்படுவார்கள். அதிகப்படியான அலைச்சல் இருக்கும். அதிக செலவுகளால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











