Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிம்மம் செல்லும் சூரியனால் உருவாகும் வசி ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் நிதி நிலை உயரப் போகுது...
Sun Transit In Leo Make Vashi Rajyoga: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். பொதுவாக கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகத்தை உருவாக்கக்கூடும்.
அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். கிரகங்கள் சொந்த ராசியில் பயணிக்கும் போது சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுவும் சூரியன் சொந்த ராசியில் நுழைவதால், வசி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
வசி ராஜயோகமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த யோகத்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வசி ராஜயோகமானது நல்ல அதிர்ஷ்டத்தை வாரி வழங்கவுள்ளது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பண ஆதாயத்தைத் தரும். இக்காலத்தில் நிதி நிலைமையை அதிகரிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை அல்லது படிக்க விரும்புபவர்களின் விருப்பங்கள் இக்காலத்தில் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வசி ராஜயோகமானது மிகவும் சிறப்பான பலன்களை வழங்கும். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும்.
பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. இதுவரை பரம்பரை சொத்துக்களில் பிரச்சனைகள் இருந்தால், இந்த யோக காலத்தில் அந்த சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications