Latest Updates
-
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
1 வருடத்திற்கு பின் மிதுனம் செல்லும் சூரியன்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Sun Transit In Gemini On June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி சூரியன் புதனின் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். மிதுன ராசிக்கு புதன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும்.
ஜோதிடத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று சிறப்பாக இருக்கும். குறிப்பாக சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெற முடியும். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் விரும்பிய இடமாற்றத்தையும் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications