Latest Updates
-
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம்
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Sun Transit In Gemini On 15 June 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயனிபத்து வருகிறார். அந்த வகையில் ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். மிதுன ராசியானது புதனின் ராசியாகும். சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால், இதன் தாக்கம் சற்று சிறப்பாக இருக்கும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்போது சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளில் வெற்றியைக் காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளைப் பொறுத்தவரை, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் நல்லபடியாக முடிவடையும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பதவி உயர்வும் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். வணிகர்கள் அதிக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். உறவுகள் இனிமையாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பார்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து நிதி நன்மைகளைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல சம்ளபத்துடன் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் உறவுகள் வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications