Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க போகுது..!
Sun Transit In Gemini On 15 June 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தந்தை, வேலை, ஆன்மா, நிர்வாகம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
நவகிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 ஜூன் 15 ஆம் தேதி சூரியன் புதன் ஆளும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். மிதுன ராசிக்கு நுழையும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அமோகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சற்று சிரமமாகவும் இருக்கலாம்.
மிதுனம் செல்லும் சூரியனால் 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள ஒருவருடன் நட்புறவு கிடைக்கலாம். இக்காலகட்டத்தில் புத்திசாலித்தனத்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். குறிப்பாக நிதி ரீதியாக சூப்பராக இருக்கும். அதிக பணத்தை சேமிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வை பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இக்காலத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் பல நற்செய்திகளைப் பெறுவார்கள். பண விஷயத்தைப் பொறுத்தவரை, அற்புதமாக இருக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் நல்ல பண வரவு உண்டு. கூட்டு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications