Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்க போறாங்க..
Sun Transit In Gemini 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 ஜூன் 15 ஆம் தேதி சூரியன் புதன் ஆளும் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான ஆனி மாதம் பிறக்கிறது. சூரியன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

ஆனால் சூரியன் மிதுன ராசிக்கு செல்லும் போது, 5 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். குறிப்பாக தொழிலில் பல தடைகளை சந்திக்கவுள்ளார்கள். பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள்.
முக்கியமாக திருமண வாழ்வில் சிக்கல்களை சந்திக்கவுள்ளார்கள். இப்போது 2023 ஜூன் மாத சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். தொழில் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சால் மன கசப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு மோசமடையக்கூடும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தினமும் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் கடுமையான பேச்சால் உறவுகள் பாதிக்கப்படும். இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் நீங்கள் இருந்தாலும், அதனால் நன்மைகளை விட தீமைகளையே பெறக்கூடும். மேலும் இக்கால கட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பீர்கள். இதனால் உறவுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் திடீரென்று பல பிரச்சனைகள் வரும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது உடைமைகளை இழக்க நேரிடும். தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கக்கூடும். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரக்கூடும். இக்காலத்தில் உங்கள் வேலையில் எடுக்கும் சில தவறான முடிவுகளால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு ரிஸ்க்கையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்களை யாரேனும் ஏமாற்றலாம். எனவே உஷாராக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications