Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு அருமையா இருக்கப்போகுது..
Sun Transit In Gemini On 15 June 2023: சனி பகவானின் தந்தையும், நவகிரகங்களின் தலைவருமான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சூரியன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் 2023 ஜூன் 15 ஆம் தேதி புதன் ஆளும் மிதுன ராசிக்கு செல்கிறார்.

மிதுனம் செல்லும் சூரியன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்த தாக்கமானது அடுத்த ஒரு மாத காலம் இருக்கும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2023 ஜூன் 15 ஆம் தேதி மிதுனம் செல்லும் சூரியனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். பெரிய முதலீடு ஏதேனும் செய்ய நினைத்தால், நல்ல அனுபவசாலிகளின் அறிவுரையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கிடைக்காது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். வாழ்க்கைத்துணையுடன் சச்சரவுகள் வரலாம். அதிக மன அழுத்தம் ஏற்படும். வீட்டிற்காக அதிகப் பணம் செலவழிக்க நேரிடும், இதனால் பணக் கஷ்டத்தை சந்திக்க நேரிடும். நண்பர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். கடன் கொடுத்த பணம் திடீரென திரும்ப கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களின் நற்பெயர் அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்த காரியங்கள் நற்பலனைத் தரும். பணிபரிபவர்களின் பணி பாராட்டைப் பெறும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பணியிடத்தில் உயர் பதவிகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். முக்கியமான வேலைகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். வியாபாரம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சாதாரணமாக இருக்கும். ஆனால் தொழிலில் சிறு மாற்றத்தை செய்தாலும், அதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். தொழில் செய்வோர் நற்பலனைப் பெறலாம். வணிகர்கள் ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட முயற்சிப்பீர்கள். எதிரிகள் உங்களுக்கு தீங்கிழைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது. நீதிமன்ற வழக்குகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். பெற்றோரின் முழு ஆசியும் கிடைக்கும். புதிய வணிகத்தை தொடங்க திட்டமிட்டிருந்தால், அதில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பீர்கள். கடனில் இருந்து விடுபடலாம். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மேம்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்துவதில் உங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். பெரிய முதலீடுகளை செய்யும் முன் சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். மன உளைச்சல் குறையும். தாயின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வல் வெற்றி பெற, படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் சற்று கலவையாக இருக்கும். பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் முக்கிய பணிகளை முடிப்பீர்கள். தொழிலில் முன்னேறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications