Latest Updates
-
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சூரிய பெயர்ச்சியால் ஜனவரி 15 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Capricorn On January 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜனவரி 15 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். மகர ராசியில் சூரியன் நுழைவதால் தை மாதம் பிறக்கிறது.

சூரியனும், சனியும் என்ன தான் தந்தை மகனாக இருந்தாலும், பகைவர்களாக கருதப்படுகிறார்கள். எனவே மகர ராசியில் சூரியன் நுழையும் போது, சில ராசிக்காரர்களுக்கு அருமையாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கப் போகிறது. சூரியன் மகர ராசியில் நுழைவதால் எந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் வணிகத்தில் நிறைய லாபமும், வெற்றியும் கிடைக்கக்கூடும்.
சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சேமிப்பீர்கள். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற முழு பலனும் கிடைக்கப் போகிறது. நீண்ட காலமாக முயற்சித்து வந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உயர்கல்வி பயில வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். உறவுகள் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications