Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
1 வருடத்திற்கு பின் மகரம் செல்லும் சூரியன்: ஜனவரி 15 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Sun Transit In Capricorn 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 15 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய பெயர்ச்சியின் போது சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். மகர ராசியில் சூரியன் நுழையும் போது தான் தை மாதம் பிறக்கிறது.

சூரியன் மகர ராசியில் நுழையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டைப் பெறும். சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு நல்ல வெற்றியுடன் லாபமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரியும் சிலர் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் வேலையின் மூலம் நீங்கள் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதேப் போல் தொழிலில் இருந்து பிரச்சனைகளும் நீங்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். முதலீடுகளால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள் மற்றும் நல்ல வெற்றியையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications