Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
கடகம் செல்லும் சூரியனால் ஜூலை 16 முதல் இந்த 5 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Sun Transit In Cancer On 16 July 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனான சூரியன் வருகிற ஜூலை 16 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசிக்கு செல்லும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுபவர். கடக ராசிக்கு சூரியன் நுழையும் போது தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது. இந்த கடக ராசியில் சூரியன் ஆகஸ்ட் 16 வரை இருந்து, பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைவார்.

சூரியன் தனது நண்பனான சந்திரனின் ராசிக்குள் நுழைவதால், பல ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது கடக ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலைகளை மாற்றுவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், அதை இக்காலத்தில் செய்யும் முன் நன்கு சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. தந்தையுடனான உறவு மோசமடையும். ஆரோக்கியம் பாதிக்கப்படும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்காது. செலவுகள் நினைத்து பார்த்திராத அளவில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படும். பணியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்த வாக்குவாதத்தை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் வேலைக்கே உலை வைத்துவிடும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்காது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலம் சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பதே நல்லது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலமானது சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் எதிரிகள் இக்காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். செலவுகள் அளவுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு சண்டையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications